கடம்பத்தூரில் முதலாமாண்டு மகளிர் தின விழா
திருவள்ளூர்: கசவநல்லாத்தூர் கிராம சங்கம், சென்னை சமூக சேவை சங்கம் இணைந்து கடம்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கசவநல்லாத்துரில் முதலாமாண்டு மகளிர் தின விழாவை நடத்தியது. கிராம மகளிர் சங்கத் தலைவிகள் கவிதா, சாவித்திரி தலைமை வகித்தனர். பெண்கள் கூட்டமைப்பு தலைவி நளினி, உஷா, சிந்து, சொர்ணசுந்தரி, தமிழ்செல்வி, நந்தினிதேவி முன்னிலை வகித்தனர். அனிதா வரவேற்றார்.இந்தியன் வங்கி மேலாளர் சாந்தி, சென்னை சமூக சேவை சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜமேரி வாழ்த்துரை வழங்கினர். ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ராஜேந்திரன் பரிசு வழங்கி பாராட்டியதோடு, ஊராட்சியில் மகளிர் குழு கட்டிடம், ஆரம்ப சுகாதார நிலையம், 100 நாள் வேலை திட்டம், காய்கறி வார சந்தை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் லல்லி, ரீனா, ராணி மற்றும் வைசாலி நகர், நேருஜி நகர், கசவநல்லாத்தூர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்திராமேரி நன்றி கூறினார்.