திருப்பதி வனப்பகுதியில் யானைகள் அட்டகாசம்
திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொந்தமான வனப்பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு 4 காட்டு யானைகள் புகுந்தன. கோயிலுக்காக வளர்க்கப்படும் சந்தன மரங்கள் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. அங்கிருந்த 16 செம்மரங்கள், 25 தென்னை மரங்கள், 4 சந்தன மரங்களை முறித்து யானைகள் சேதப்படுத்தின. மேலும் சந்தன மரங்களை வளர்ப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த குடிநீர் பைப்களை உடைத்து சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த தேவஸ்தான மற்றும் அரசு வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இப்பகுதிக்குள் யானைகள் வராமல் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து வனத்துறையினர் ஆலோசனை நடத்திவருகின்றனர்.