நடிப்பு பற்றி விமர்சனம்: நீது சந்திரா தாக்கு
‘ஆதி பகவன்‘ நடிகை நீது சந்திரா நீண்ட நாட்களாக தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இந்தி பட நடிப்பு மற்றும் சொந்த படம் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தவருக்கு ஷாஜி கைலாஷ் இயக்கும் ‘வைகை எக்ஸ்பிரஸ்‘ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இரட்டை வேடத்தில் நடிக்கும் அவரைப்பற்றி சிலர் விமர்சனங்கள் வெளியிட்டிருந்தனர். இதனால் கோபம் அடைந்தவர், விமர்சனம் செய்தவர்களை சகட்டு மேனிக்கு தாக்கினார்.
இது பற்றி அவர் கூறும்போது, ‘என்னுடைய கடின உழைப்பை கண்டு பாராட்டாதவர்கள் யாராக இருந்தாலும் என்னைப் பற்றி விமர்சிக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அதை ஏற்கவும் நான் தயாராக இல்லை. என்னை விமர்சிக்கும் உரிமையும் அப்படிபட்டவர்களுக்கு தடை செய்யப்படுகிறது' என்றார்.
நீது சந்திரா நடிப்பு மட்டுமல்லாமல் மாடலிங் செய்வதுடன் மார்ஷல் கலையிலும் தேர்ச்சி பெற்றவர். சமீபத்தில் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் சண்டை காட்சியில் நடித்தபோது டைமிங் மிஸ் ஆனதால் ஸ்டன்ட் வீரரின் கை அவரது கண் அருகே மோதியதில் காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.