Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
09
Mar
இளநிலை ஆராய்ச்சியாளர், கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு சிஎஸ்ஐஆர் நடத்தும் 'நெட்' தேர்வு அறிவிப்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து நடத்தும் “ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் - நெட்“ தேர்விற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கும் தேர்வு செய்யப்படுவர்.

தகுதி தேர்வு:


JRF - NET June 2015.


ஜேஆர்எப் தேர்வு:

1.1.2025 தேதிப்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

நெட் தேர்வு:

அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

ஜேஆர்எப் பணிக்காக அதிகபட்ச வயதுவரம்பில் எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 10 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:

4 வருட B.S.,/ B.E.,/ B.Tech.,/ B.Pharm.,/ MBBS.,/ ஒருங்கிணைந்த BSMS/ M.Sc., படிப்பை முடித்திருக்க வேண்டும். பொது மற்றும் ஒபிசியினர் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடனும், எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் 50 சதவீத மதிப்பெண்களுடனும் இந்த கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அகில இந்திய அளவில் ஜேஆர்எப் - நெட் 2015 எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அறிவிக்கப்படுவர்.

'Life Sciences, Earth, Atmospheric, Ocean and Planetary Sciences, Mathematical Sciences, Chemical Sciences, physcial Sciences, Engineering Sciences' ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து விண்ணப்பதாரரின் முக்கிய பாடப்பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்.

பெங்களூர், பவாநகர், போபால், புவனேஸ்வர், சண்டிகார், சென்னை, கொச்சின், புதுடெல்லி, குண்டூர், கவுகாத்தி, ஐதராபாத், இம்பால், ஜம்மு, ஜாம்ஷெட்பூர், காரைக்குடி, கொல்கத்தா, லக்னோ, நாக்பூர், பிலானி, புனே, ரெய்ப்பூர், ரூர்கி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம், உதய்பூர், வாரணாசி ஆகிய இடங்களில் நடைபெறும்.

தேர்வு கட்டணம்:

பொதுப் பிரிவினருக்கு ரூ.1000, ஒபிசியினருக்கு ரூ.500, எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250. இதற்காக கட்டண செலானை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இந்தியன் வங்கியில் செலுத்த வேண்டும்.

www.csirhrdg.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

Senior Controller of Examination,
Examination Unit,
Human Resource Development Group,
CSIR Complex,
Library Avenue,
PUSA,
NEWDELHI 110012.


கட்டணம் செலுத்த கடைசி நாள்: 11.3.2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.3.2015.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 17.3.2015.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement