மத்திய
அரசின் பொருளாதார துறை மற்றும் புள்ளியியல் துறையில் காலியாக உள்ள இளநிலை
நிரந்தர அதிகாரி பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு மூலம் தகுதியானவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
தேர்வு:
India Economic Service/ Indian Statistical Service Examination 2015.
காலியிடங்கள்:
பொருளாதார துறையில் 6 இடங்களும், புள்ளியியல் துறையில் 55 இடங்களும் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
1.8.2025
தேதியின்படி 21 லிருந்து 30க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும்,
ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 ஆண்டுகளும்,
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு
அளிக்கப்படும்.
கல்வித்தகுதி:
இந்திய
பொருளாதார துறை பணிக்கு - பொருளியல்/ பயன்பாட்டு பொருளியல்/ வணிக
பொருளியல்/ எக்னாமெட்ரிக்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலை
பட்டப்படிப்பு.
இந்திய புள்ளியியல் துறை பணிக்கு:
புள்ளியியல்/
கணிதப் புள்ளியியல்/ பயன்பாட்டு புள்ளியியலில் பட்டப்படிப்பு அல்லது
முதுகலைப் பட்டப்படிப்பு. இறுதியாண்டு தேர்வு முடிவுக்காக
காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தமிழ்நாட்டில் சென்னையில் தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணம்:
ரூ.200.
இதை பாரத ஸ்டேட் வங்கியில் பணமாக செலுத்தலாம் அல்லது ஸ்டேட் பாங்க் ஆப்
இந்தியா, ஸ்டேட் பாங்க் ஆப் பைகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க்
ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா,
ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் விசா/
மாஸ்டர் கிரெடிட்/ டெபிட் கார்டு ஐ பயன்படுத்தி நெட் பேங்கிங் முறையில்
செலுத்தவும்.
எஸ்சி, எஸ்டியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 23.5.2015.
கட்டணம் செலுத்த, ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.3.2015.