உத்திரமேரூரில் இளைஞர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூர் திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் உத்திரமேரூரில் நேற்று நடந்தது. பேரூர் செயலாளர் பாரிவள்ளல் தலைமை தாங்கினார். காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். பின்னர் அவர், மு.க.ஸ்டாலின் பிறந்த நாளன்று உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் பிறந்த 2 குழந்தைகளுக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார்.நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.நாகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், இளைஞரணி அமைப்பாளர் மணி பேரூராட்சி தலைவர் சுமதி குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.