Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
07
Mar
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி கடன் உதவி

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த கல்வியாண்டு ரூ.15 லட்சம் கல்வி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் முகாம் சென்னை அசோக் நகரில் இன்று காலை நடந்தது. முகாமுக்கு தென்சென்னை மாவட்ட தலைவர் நாகூர் மீரான் தலைமை தாங்கினார். துணை தலைவர் முகைதீன், அம்ஜத்கான், ஹாஜி முகமது அலி, முகமது ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மௌலவி ஆபிருத்தீன் மன்பயி, மாநில செயற்குழு உறுப்பினர் முகமது அலி நியாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விழாவில் மொத்தம் 60 மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான கல்வி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 485 மதிப்பெண் பெற்ற சாந்தோம் லிட்டில் பிளவர் கான்வென்ட் காதுகேளாதோர் பள்ளி மாணவி அப்ரூசுக்கு ரூ.5000 மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement