திருத்தணி-அரக்கோணம் புறவழி சாலைக்கு கையகப்படுத்திய நிலங்களின் உண்மை தன்மை ஆய்வு
திருத்தணி: திருத்தணி-அரக்கோணம் புறவழி சாலை ரூ.48 கோடி மதிப்பில் திட்டமதிப்பீடு செய்து, அதற்கான பணிகள் நடந்து வருகிறது. முதல் கட்டமாக திருத்தணி நகரம், பட்டாபிராமபுரம், தேவஸ்தானபுரம் ஆகிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில், திருத்தணி நகருக்குட்பட்ட 93 நில உரிமையாளர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு நஷ்டஈடு வழங்கப்பட உள்ளது. இதற்காக உரிமையாளர்களின் உண்மை தன்மை அறியும் நிகழ்ச்சி திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, திருத்தணி தாசில்தார் கணேசன், வருவாய் ஆய்வாளர் தேவராஜ், விஏஓ முனிகிருஷ்ணன் ஆகியோர் ஆவணங்களை சோதனை செய்து உண்மையான சொத்துதானா என ஆய்வு செய்தனர். இதில் 20க்கு மேற்பட்ட நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.