2 டன் செம்மரக்கட்டை வேனுடன் பறிமுதல்
புழல்: செங்குன்றம் போலீசார் நேற்றிரவு கிராண்ட்லைன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாந்தி நகரில் சாலையோரம் ஒரு டெம்போ வேன் வெகு நேரமாக நின்றிருந்தது. சந்தேகத்தின் பேரில் வேனில் சோதனை செய்தனர். அதற்குள் 2 டன் செம்மரக்கட்டைகள் இருந்தது. டெம்போ வேன், செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து கும்மிடிப்பூண்டியில் உள்ள வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடக்கிறது.