மதுராந்தகம்: வறட்சிக்கு எதிரான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் கிராமத்தில் நடைபெற்றது.இந்திய அரசு சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் மற்றும் ரூரல் எஜூகேஷன் அண்டு எக்கனாமிக் டெவலப்மென்ட் சொசைட்டி இணைந்து நடத்திய தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் கிராமத்தில் நடைபெற்றது.இந்த ஊர்வலத்துக்கு மகளிர் சக்தி அமைப்பின் தலைவர் பிரேமா தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் லாரன்ஸ், கோபிராஜன், ஆரோக்கியம், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.