Untitled Document
2011
18
May
மாதம் ரூ.12 ஆயிரம் உதவித்தொகையுடன் ஜியாலஜி துறையில் ஆராய்ச்சி படிப்பு


இந்தியாவில் கனிமவளம் மற்ற நாடுகளை ஒப்பிடும் போது அதிகம். கனிமத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இத்துறையில் வல்லுனர் களை உருவாக்கும் நோக்கில்  குறிப்பிட்ட சில இடங்களில் உயர்கல்வி நிலையங்கள் இது சார்ந்த பட்டம், பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகளை நடத்தி வருகின்றன. தன்பாத் தில் உள்ள ‘Indian School of Mines' என்ற   உயர்கல்வி நிலையத்தில் நிலஅமைப்பியல் துறையில் (ஜியாலஜி) உதவித்தொகையுடன் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அப்ளைடு ஜியாலஜி/ஜியாலஜி பாடத்தில் முதல் வகுப்பில் எம்எஸ்சி அல்லது எம்எஸ்சி (டெக்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிஎஸ்சி ஜியாலஜி பாடத்துடன் கணிதம்/இயற்பியல்/வேதியியல் பாடங்களில் ஏதேனும் இரண்டு பாடங்களை படித்திருக்க வேண்டும். அத்துடன் நெட்/கேட் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த ஆராய்ச்சி படிப்பில் சேருபவர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை அளிக்கப்படும். இதுதவிர வீட்டு வாடகைப்படியும் உண்டு. ஆராய்ச்சி காலம் மொத்தம் 3 ஆண்டுகள். 30 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேற்கண்ட தகுதி உடைய நபர்கள் விண்ணப்ப படிவம் தயாரித்து அதில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும். அத்துடன் பயோடேட்டா, கல்வித்தகுதி மற்றும் வயது சான்றிதழ்களின் சான்றொப்பம் பெற்ற நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, ‘Dr.M.K.Mukerjee, Department of Applied Geology, Indian School of Mines, Dhanbad82600 4' என்ற முகவரிக்கு வரும் மே30க்குள் அனுப்ப வேண்டும்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
 




Follow Me

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,