பைக்கில் சாராயம் கடத்தல்: 2 பேர் கைது
பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அடுத்த ஐயன்கண்டிகை பகுதியில் இருந்து பைவலசா பகுதிக்கு பைக்கில் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெடியங்காடு-புதூர் மேட்டில் எஸ்ஐ சோமன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் கள்ளச்சாராயம் கடத்திவந்த பைவலசாவை சேர்ந்த ராஜேஷ் (31), சின்னசாமி (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 30 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.