Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
05
Feb
இந்த ஆண்டு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் செல்கிறார் : பிரெஞ்சு தூதரகம் தகவல்


புதுடெல்லி: இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் லாரன்ட் பாபியஸ் நாளை புதுடெல்லி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டவர்களை சந்தித்து பேசுகிறார். இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று பிரெஞ்சு தூதரக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.பிரான்ஸ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக, பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் லாரன்ட் பாபியஸ் நாளை புதுடெல்லி வருகிறார். இங்கு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான ஒருங்கிணைப்பு குறித்து லாரன்ட் பாபியஸ் ஆலோசனை நடத்துகிறார். பிரான்ஸ் நாட்டில் பத்திரிகை அலுவலகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா முதலில் கண்டனம் தெரிவித்ததுடன், இன்றுவரை பிரான்சின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது.இதற்கு முன் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபரின் தூதரக ஆலோசகர் ஜாக்குஸ் ஆடிபர்ட் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து, இருதரப்பு வணிக மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த நாளை பிரான்ஸ் வெளியுறவு துறை அமைச்சர் இந்தியா வருகிறார்.அவர் பிரதமர் மோடியை சந்திக்கும்போது, பிரான்ஸ் நாட்டுக்கு வரும்படி அவரும் அழைப்பு விடுக்கிறார். பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, இந்த ஆண்டு மத்திக்குள் பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு வருகை தர சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது பயண தேதிகள் இன்னும் முடிவாகவில்லை என்று பிரெஞ்சு தூதரக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement