திருப்போரூர்-திருப்போரூர் அருகே ஏடிஎம் காவலாளி இன்று காலை மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலையில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இப்பகுதியின் எதிரே ப £ங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இந்த ஏடிஎம் மையத்தில் திருப்போரூர் அடுத்துள்ள தண்டலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (58) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்த £ர். இவர் வழக்கம் போல் நேற்று இரவு 9 மணி அளவில் பணிக்கு வந்துள்ளார். இந்நிலையில், இன்று க £லை 5 மணி அளவில் ஏடிஎம் மையம் அருகே உள்ள டீ கடைக்கு வழக்கம் போல் அப்பகுதியை சேர்ந்தவர் கள் வந்துள்ளனர். அப்போது ஏடிஎம் மையம் அமைந்துள்ள வறண்ட பகுதியில் காவலாளி அண்ணாதுரை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே திருப்போரூர் போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசா ரின் முதற்கட்ட விசாரணையில், அண்ணாதுரை உடலில் காயங்கள் எதுவும் இல்லை. வாய், மூக்கு வழியாக ரத்தம் வெளிவந்துள்ளது. முக்கியமாக ஏடிஎம் மையத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை, இருப்பினும் அங்கு பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் காட்சி பதிவுகளை ஆய்வு செய்ய உள்ளோம். ம £ரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.