இந்திய அமெரிக்கருக்கு மார்ட்டின் லூதர் விருது
வாஷிங்டன்:சிறந்த சமூக சேவையை பாராட்டி இந்திய அமெரிக்கருக்கு மார்ட்டின் லூதர் கிங் விருது வழங்கப்பட்டது.இந்தியாவை சேர்ந்த பிராங்க், அமெரிக்காவில் பிரபல தொழிலதிபாராக உள்ளார். சமூக ஆர்வலரான இவர், உலக அளவில் பல்வேறு சமூக சேவைகளை செய்துள்ளளார். மக்கள் பணியாற்றிய இவருக்கு அமெரிக்காவின் பெருமைமிக்க மார்ட்டின் லூதர் கிங் விருது வழங்கப்பட உள்ளதாக விருது கமிட்டி அறிவித்துள்ளது. கடந்த 91ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது சிறந்த சமூக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சிறப்புமிக்க விருதை பெறும் பிராங்க் கூறுகையில், ‘‘இந்த விருதை பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. காந்தி மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் எனது வழிகாட்டிகள். இருவருக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. காந்தியின் அகிம்சை கொள்கைகளை பின்பற்றி பல்வேறு போராட்டங்களை லூதர் கிங் நடத்தியுள்ளார். காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியவர்கள்’’ என்றார்.