மேலாண்மை படிப்பில், வணிக நிர்வாகம், நிதி நிர்வாகம், ஏற்றுமதி, மருத்துவமனை, சந்தை நிர்வாகம் என பல்வேறு பிரிவுகளில் படிப்புகள் உள்ளன.
நல்ல சம்பளத்தோடு உடனே வேலை கிடைத்துவிடும் என்பதால் மாணவர்கள் எம்பிஏ படிப்புகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். உரிய பிரிவை தேர்ந்தெடுத்து படிப்பவர்களுக்கு, அத்துறையில் வேலை நிச்சயம். கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் 14 வகையான எம்பிஏ படிப்புகள் உள்ளன. ஒவ்வொரு படிப்பும் உடனடி வேலைவாய்ப்பு, திறன் வளர்ப்பு, தனித்திறமை மேம்பாடு, ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.
எம்பிஏ (மார்க்கெட்டிங் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்) எம்பிஏ (மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்) எம்பிஏ (டூரிசம் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட்) எம்பிஏ (பைனான்சியல் மேனேஜ்மென்ட்) எம்பிஏ (ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்) எம்பிஏ (இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட்) எம்பிஏ (இன்டர்நேஷனல் பிசினஸ்) எம்பிஏ (ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட்) எம்பிஏ (ரீடெய்ல் மேனேஜ்மென்ட்) எம்பிஏ (இன்பர்மேஷன் சிஸ்டம் மேனேஜ்மென்ட்) எம்பிஏ (பைனான்சியல் சர்வீஸ்) எம்பிஏ (என்டர்பிரனர்ஷிப்) எம்பிஏ (சர்வீசஸ் மேனேஜ்மென்ட்) எம்பிஏ (எக்ஸ்போர்ட் மேனேஜ்மென்ட்) ஆகிய படிப்புகளை பாரதியார் பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. அனைத்து படிப்புகளுக்குமே ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். படிப்பின் கால அளவு 2 ஆண்டுகள்.
மாணவர் சேர்க்கை, கட்டணம், வகுப்புகள் துவங்கும் தேதி உள்ளிட்ட விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook