காதலியை கேலி செய்ததை தட்டி கேட்டவருக்கு அடி: 3 பேர் கைது
தண்டையார்பேட்டை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை வஉசி. நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (20). மெக்கானிக். இவர், தனது பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வருகிறார். அந்த பெண்ணை புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த மதிவாணன், அவரது நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதுபற்றி அறிந்த விக்னேஷ் சென்று மதிவாணனை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது மதிவாணன், அவரது நண்பர்கள் மோகன், ஜெயவிக்னேஷ் ஆகியோர் விக்னேஷை சரமாரியாக தாக்கி உள்ளனர். அங்குள்ள கல்லில் விழுந்த விக்னேஷ், தலையில் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதிவாணன், மோகன், ஜெயவிக்னேஷ் ஆகியோரை கைது செய்தனர்.