Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
06
Jan
நயன்தாரா பாணியில் கவுண்டமணி தடாலடி: இயக்குனர்கள் அப்செட்


கோலிவுட் முதல் பாலிவுட் வரை புதுபட ரிலீஸுக்கு முன் அதனை ரசிகர்களிடையே கொண்டு சேர்ப்பதற்காக புரமோஷன் நிகழ்ச்சிகள் தவிர்க்க முடியாததாகிவிட்டது. டாப் ஹீரோக்கள் முதல் குட்டி ஹீரோக்கள் வரை இதில் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருக்கிறது. சில ஹீரோயின்களுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது. எதற்கும் அசராத அஜீத் இதுபோன்ற புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என்று தொடக்கத்திலேயே கண்டிஷன் போட்டுவிடுகிறார். அதேபோல் நயன்தாராவும் கழன்றுகொள்கிறார். எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் சரி அந்த விழாக்களில் பங்கேற்பதில்லை என்ற பாலிசி வைத்திருக்கிறார் நயன்தாரா.

இந்த பாலிசியை அப்போதே பின்பற்றி வந்தவர் கவுண்டமணி. எந்த விழாக்களிலும் அவரை பார்க்க முடியாது. பல வருட இடைவெளிக்கு பிறகு அவர் தற்போது 2 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.லேட்டஸ்ட் டிரண்ட்டுக்கு ஏற்றபடி பட புரமோஷனில் பங்கேற்க வேண்டும் என்று கவுண்டமணியிடம் இயக்குனர்கள் கேட்டிருக்கின்றனர். ' அதெல்லாம் நமக்கு ஒத்துவராது. படத்தை பற்றி நிறைய செய்தி போடு, அதுபற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் நிகழ்ச்சியில் பங்கேற்பது, பேட்டி கொடுப்பதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது. அப்படி எதுவும் சாதித்துவிடவில்லை'  என்று சொல்லி நழுவிவிட்டாராம். அப்செட்டான டைரக்டர்கள், அவரை புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சியை கைவிடவில்லையாம்....

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement