எனக்கு நடனம் ஆடத் தெரியாது : ஹீரோ ஒப்புதல்
தெரியாவிட்டாலும் குத்துமதிப்பாக நடனம் ஆடி வாங்கிக்கட்டிக்கொள்ளும் நடிகர்களுக்கு மத்தியில் எனக்கு ஆடத் தெரியாது என்று ஒப்புக்கொண்டார் ஹீரோ ஆர்.கே. ‘எல்லாம் அவன் செயல்' படத்தில் வக்கீலாக நடித்து பச்சக்கென்று மனதில் ஒட்டிக்கொண்ட இவர் அடுத்து ‘என் வழி தனி வழி' படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ரஜினியின் பஞ்ச் வசனத்தை தலைப்பாக்கி இருக்கும் இப்படத்தை ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். பூனம் கவுர் ஹீரோயின். ஸ்ரீகாந்த் தேவா இசை. இதுபற்றி ஆர்.கே. கூறியதாவது:இப்படத்தின் ஆடியோ, டிரெய்லரை மொபைல் போன் ஆன்லைனில் வெளியிட்டிருக்கிறேன். உட்கார்ந்த இடத்திலிருந்தே இப்படத்தின் போஸ்டரை மொபைல் போனில் கிளிக் செய்தால் பாடலை கேட்கலாம், டிரெய்லரைப் பார்க்கலாம். இந்த பாணியில் ஆடியோ வெளியாவது இதுதான் முதல்முறை. இதுவொரு போலீஸ்அதிகாரி பற்றிய கதை. நடனம் ஆடாமல் இப்படி நழுவுகிறீர்களே என்று சிலர் கேட்டனர். எனக்கு நடனம் ஆட வரவில்லை ஆனாலும் முயற்சி செய்து சுமாராக ஆடி இருக்கிறேன். ஆட ஆட வருமென்று நம்புகிறேன்' என்றார்