சென்னை: ஆட்வின் பெண்கள் நல்வாழ்வு மற்றும் சமூக அமைப்பின் மாநில பொறுப்பாளர் சாந்தாகுமாரி அளித்த பேட்டி: ஆட்வின் பெண்கள் நல்வாழ்வு மற்றும் சமூக அமைப்பு பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் மூலம் பெண்களுக்கு தொழில் பயிற்சி மற்றும் தொழில்தொடங்க உதவி செய்து வருகிறோம். கோபிசெட்டிபாளையம் பகுதியில் எங்கள் அமைப்பை நடத்துவதற்கு அப்பகுதி அதிமுக கவுன்சிலர் ஜெயக்குமார் எங்களிடம் பணம் கேட்டு மிரட்டி வருகிறார். இந்நிலையில், எங்கள் அமைப்பில் இருந்து வெளியேறிய சிலர் எங்கள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்ததாக தெரிகிறது. இதற்கும் எங்கள் அமைப்பிற்கும் சம்பந்தமில்லை. எனவே, தமிழக முதல்வர் அல்லது பிரதமர் எங்கள் அமைப்பின் மீது விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கலாம். எங்கள் மீது விசாரணை கமிஷன் வைக்க வலியுறுத்தி எங்கள் அமைப்பு சார்பில், 32 மாவட்டங்களில் பல லட்சம் பெண்களை திரட்டி உண்ணாவிரதம் இருக்க போகிறோம். மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி 1 லட்சம் கையெழுத்து பெற்று முதல்வருக்கு கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.