சென்னை: திராவிட மனித சங்கிலி, மனித சங்கிலி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் செங்கை பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கை: வெளி மாநிலத்தில் இருந்து ஒருவர் பணத்தை ஆட்டோவில் எடுத்து செல்லும் போது வாகன தணிக்கை என்ற பெயரில் ஒன்றரை லட்சம் பணத்தை ஏமாற்றி அபகரித்த 4 காவலாளிகளை பணியிடை நீக்கம் செய்து கைது நடவடிக்கைக்கு உத்தரவிட்ட சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்க்கு பாராட்டுக்கள். காவல் துறையினர் அனைவரும் வருங்காலத்திலாவது கண்ணியத்துடன் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.