காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பஸ்போரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. தீவிரவாதி பதுங்கியிருந்த இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். தீவிரவாதிகள் திருப்பி சுட்டனர். சில மணி நேரம் நடந்த சண்டைக்குபின் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீரில் இறுதிக்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த என்கவுன்டர் மூலம் தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.