15 பேரை கடித்த வெறிநாய் எஸ்.ஐ.யையும் விடவில்லை
தக்கலை: குமரி மாவட்டம் தக்கலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தெருநாய்கள் தாராளமாக சுற்றித்திரிகின்றன. முக்கிய சாலைகள், தெருக்கள், அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரி பகுதிகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். தக்கலை பஸ் நிலைய பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு வெறி நாய் ஒன்று சுற்றித்திரிந்தது. இது அங்கு பஸ் ஏற வந்த ஒரு சிலரை கடித்துள்ளது. பின்னர் மெயின் ரோட்டில் உ ள்ள வங்கி ஒன்றின் இரவு நேர காவலரையும் கடித்தது.
அப்போது தக்கலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக இருக்கும் கிறிஸ்துதாஸ் என்பவர் மதுரை ஐகோர்ட்டிற்கு செல்ல பஸ் ஏற அங்கு வந்தார். அவரை யும் நாய் கடித்தது. இதையடுத்து வெறிநாய் கடிக்கு ஆளானவர்கள் தக்கலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்றனர். ஒரே நாளில் 15க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். வெறிநாய்த் தொல்லையை ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.