Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
22
Nov
கவர்ச்சி தோற்றம் சமந்தா சலிப்பு


சென்னை: கவர்ச்சி தோற்றத்துக்கு மாற முடியாமல் தவித்து வருகிறார் சமந்தா.ஸ்லிம்மாக இருந்தாலும் சமந்தாவின் தோற்றத்தில் கவர்ச்சி குறைவாக இருப்பதாக ஒரு சில இயக்குனர்கள் அவருக்கு அட்வைஸ் செய்தனர். சமீபத்தில் வந்த ஒரு பட வாய்ப்பில் கதாபாத்திரத்துக்கு கவர்ச்சியான தோற்றம் தேவை அதற்கு தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்து கவர்ச்சியை எடுப்பாக காட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றனர். டுவிட்டர் பக்கத்திலும் ரசிகர்கள் இந்த கருத்தை வெளியிட்டனர். இதையடுத்து தினமும் ஜிம்மிற்கு சென்று பயிற்சி செய்ய முடிவு செய்தார்.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதற்கு அவருக்கு போர் அடிக்கிறதாம். ஜிம்மில் பயிற்சி செய்வதைவிட்டு விட்டு சுவற்றின் ஒரு ஓரமாக அமர்ந்து உற்சாகம் இல்லாமல் கவலையாக இருப்பதுபோன்ற தனது போட்டோவை இணைய தள பக்கத்தில் அவர் வெளியிட்டார். இதைப்பார்த்து கவலை அடைந்த அவரது ரசிகர்கள் சமந்தாவுக்கு உற்சாக வார்த்தைகள் கூறி தெம்பூட்டி இருக்கின்றனர். ‘சக ஹீரோயின்களுடன் போட்டியில் நிலைக்க வேண்டுமென்றால் அதற்கு உடற்கட்டு அவசியம். போர் அடிக்கிறதே என்று ஒர்க்அவுட் செய்வதைவிட்டுவிடாமல் பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்' என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement