பிரபுதேவா ஷூட்டிங்கில் புகுந்த பாம்பு
சென்னை: பிரபுதேவா ஷூட்டிங்கில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நடிகர் பிரபுதேவா இயக்கும் இந்தி படம் ‘ஆக்ஷன் ஜாக்சன்‘. அஜய்தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு புனேவில் நடந்தது. புதர்கள் அடர்ந்த புல்தரை பகுதியில் காட்சி படமாகிக்கொண்டிருந்தபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களும், லைட் மேன்களும் பாம்பு பாம்பு என்று அலறியபடி சிதறி ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக படபிடிப்பு நிறுத்தப்பட்டது.
புல்தரை மீது நாகபாம்பு ஒன்று ஊர்ந்து வந்துகொண்டிருந்ததை பார்த்த பிரபுதேவா பயம் எதுவும் இல்லாமல் அதன் அருகில் சென்று அமர்ந்து கையால் பிடிக்க முயன்றார். அவரைப்பார்த்து பாம்பு சீறியது. ஆனாலும் பயப்படாமல் அதை பிடித்தார். அவரது செயலை அங்கிருந்தவர்கள் பயத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ‘யாரும் இதை அடிக்க வேண்டாம் அது தன்னால் சென்றுவிடும்' என்று பிரபுதேவா கூறினார். சில நிமிடங்களில் அங்கிருந்த புதரில் சென்று பாம்பு மறைந்தது.