இயக்குனர்களுக்கு மதுரிமா சலுகை
சென்னை: பெரிய இயக்குனர் படமென்றால் ஹீரோயின் வேடம் தராவிட்டாலும் நடிப்பேன் என்றார் மது ரிமா.சேர்ந்து போலாமா, இபிகோ படங்களில் நடித்திருப்பவர் மது ரிமா. அவர் கூறியது:நிறைய படங்களில் நடிக்கவில்லையே என்கிறார்கள். அறிமுக படம் வெளியானவுடனே நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. சட்டப் படிப்பை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வேறு வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டேன். அப்போதைக்கு படிப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தேன். ஆனால் இப்போது நடிப்பில் முழுகவனத்தை செலுத்த முடிவு செய்திருக்கிறேன். என்னை தேடி வரும் கதாபாத்திரங்களில் நடிப்பேன். சினிமாவில் எனது கனவு நனவாகும்வரை நடிப்பை தொடர்ந்துகொண்டே இருப்பேன்.புரி ஜெகன்னாத் இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்கிறேன். ஜூனியர் என்டிஆர், காஜல் ஜோடியாக நடித்தாலும் இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தர புரி ஜெகன்னாத் விரும்பினார். ஹீரோயின் வேடம் இல்லை என்றாலும் இவரைப்போன்ற இயக்குனர்கள் படமென்றால் சிறிய வேடமென்றாலும் நடிப்பேன்.இவ்வாறு மதுரிமா கூறினார்.