Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
06
Nov
கோலிவுட்டில் பரவும் 2வது திருமண சீசன்


சென்னை: கோலிவுட்டில் அடுத்தடுத்து 4 பேருக்கு திருமணங்கள் நடைபெற உள்ளது. இதில் 3 திருமணங்கள் மறுமணம் என்பது குறிப்பிடத்தக்கது.ஹாலிவுட் நட்சத்திரங்கள் விவாகரத்து செய்வதும், மறுமணம் செய்வதும் சகஜமாக இருந்து வந்தது. அந்த கலாசாரம் தற்போது பாலிவுட், கோலிவுட்டில் பரவி வருகிறது. நவம்பர் 9ம் தேதி ‘ராஜா ராணி இயக்குனர் அட்லீ, நடிகை கிருஷ்ணபிரியா காதல் திருமணம் சென்னையில் நடைபெற உள்ளது. இது தவ¤ர, நடைபெற உள்ள  திருமணங்கள் அனைத்தும் மறுமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அரிமா நம்பி, ‘கணிதன் படங்களின் இசைஅமைப்பாளரும், டிரம்ஸ் இசைக்கலைஞருமான டிரம்ஸ் சிவமணிக்கும், பாடகி ருனா ரிஸ்விக்கும் வரும் 10ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறுகிறது.

 சிவமணிக்கு இது 2வது திருமணம். அதேபோல் வரும் டிசம்பர் மாதம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பேஷன் டிசைனர் ஜபருன்னிஸா காதல் திருமணம் துபாயில் நடக்கிறது. இது யுவன்சங்கர்ராஜாவுக்கு 3வது திருமணமாகும். வரும் 10ம் தேதி நடிகர் ரஞ்சித், நடிகை ராகசுதா திருமணம் சென்னை திருவேற்காட்டில் நடைபெறுகிறது. ரஞ்சித்துக்கு இது 2வது திருமணம்.நடிகை சரிதா, மலையாள நடிகர் முகேஷ் தம்பதி விவாகரத்து பெற்றனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் மெதில் தேவிகா என்ற நடன பெண்மணியை முகேஷ் 2வதாக மணந்தார். அதுபோல் திலீப்-மஞ்சுவாரியர் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். விவாகரத்துக்கு பிறகு திலீப் இரண்டாவது திருமணம் செய்வார் என்று திரையுலகில் பேசப்படுகிறது.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement