ஸ்டன்ட் மாஸ்டர் ஆன பிரபுதேவா
சென்னை:நடன இயக்குனர் பிரபுதேவா திடீர் ஸ்டன்ட் மாஸ்டர் ஆனார்.பிரபுதேவா இந்தி படங்களை இயக்கி வருகிறார். அவர் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘ஆக்ஷன் ஜாக்ஸன். அஜய் தேவ்கன் ஹீரோ. இப்படத்துக்குத்தான் பிரபுதேவா ஸ்டன்ட் காட்சி அமைத்திருக்கிறார். இதுபற்றி அஜய் தேவ்கன் கூறும்போது,‘இப்படத்தில் ஸ்டைலுடன் கூடிய வாள் சண்டை காட்சி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இதுபோல் சண்டை காட்சி செய்வதால் அதற்காக பயிற்சி எடுத்து பிறகு நடித்தேன். இக்காட்சி ரசிக்கும்படி படமாகி உள்ளது. மேலும் எனது எடையை கூட்டி நடித்ததுடன் பின்னர் 17 கிலோ எடை குறைத்தும் நடித்தேன். இதற்கு 2 மாதம் பிடித்தது. வாள் சண்டை காட்சியை ஸ்டைலாக பிரபுதேவாவே அமைத்தார் என்றார்.