சென்னை: படம் முழுவதும் வில்லன், வில்லியை மையமாக வைத்து உருவாகிறது புதிய படம் ‘பாதி உனக்கு பாதி எனக்கு. இதுபற்றி இயக்குனர் எம்.ஏ.விஜயகுமார் கூறியதாவது:சுயநலமாக திட்டம் போட்டு காரியம் சாதித்துக் கொண்டாலும் என்றாவது ஒருநாள் அதற்கான தண்டனை கிடைத்தே தீரும் என்பதுதான் கதைக்கரு. தப்பு செய்கிறவர்களுக்கு தண்டனை கொடுக்கும் ஒரு கதாபாத்திரம் இருந்தால்தான் ஹீரோ. அவருக்கு ஒரு காதலி இருந்தால் அவர்தான் ஹீரோயின் என்ற வழக்கமான பார்முலாவை இப்படத்தில் தூக்கிப்போட்டிருக்கிறேன். இதனால் ஹீரோ, ஹீரோயின் என்று யாரும் கிடையாது. படம் முழுவதும் நெகடிவ் கேரக்டர்கள்தான். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு காலமே தண்டனை எப்படி தருகிறது என்பது கிளைமாக்ஸ்.ஆர்யன், ஆனந்த், சரவணன், சுவாதி, திவ்யஸ்ரீ, நீத்து, பேபி நிகிதா என எல்லோருமே புதுமுகங்களாக நடிக்கின்றனர். சென்னை, செஞ்சி, அரக்கோணம், திண்டிவனம், ஊட்டி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வி.எஸ்.பாலாஜி தயாரிக்கிறார். விஜய் தீபக் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்பிஎல்.செல்வதாசன், பாலன், கணேஷ் இசை அமைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.