தீபாவளி பட்டாசு விபத்து தடுக்க தயார் நிலையில் 108 ஆம்புலன்ஸ்: திருவள்ளூர் மண்டல அதிகாரி தகவல்
திருவள்ளூர்: தீபாவளியை பாதுகாப்பு டன் கொண்டாட 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளது என்று திருவள்ளூர் மண்டல மேலாளர் முகமது பிலால் கூறினார். அவர் வெளியிட் டுள்ள அறிக்கை விவரம்:108 ஆம்புலன்ஸ்கள் சென்னையில் 33, காஞ்சிபுரத்தில் 37, திருவள்ளூரில் 33 என மொத்தம் 103 இயக்கப்படுகிறது. தீபா வளியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக ஆம்புலன்சில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. அவசர தேவைக்கேற்ப செயல்படும் வகையில் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள், ஓட்டுனர் கள், 108 ஆம்புலன்ஸில் தயார் நிலையில் இருப் பார்கள். மேலும் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது குறித்து விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.108 ஆம்புலன்ஸில் தீயணைப்பு கருவி, மீட்பு கருவி, உயிர்காக்க உதவும் ஆக்சிஜன் சிலிண்டர், மருந்து பொருட்கள் உள்ளன. 108 நம்பரை தொடர்பு கொண் டால் போதும் உடனே நடவ டிக்கை எடுக்கப்படும். மக்களுக்காக எந்த நேரமும் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட் டுள்ளது.