வருவாய் திட்ட முகாமில் 38 மனுக்களுக்கு தீர்வு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்ணமல்லி ஊராட்சியை சேர்ந்த ஐயர் கண்டிகையில் நேற்று நடைபெற்ற வருவாய் திட்ட முகாமில் 38 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்ணமல்லி ஊராட்சியை சேர்ந்த ஐயர் கண்டிகையில் வருவாய் திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். துணை தலைவர் துரை முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் சந்திரன் வரவேற்றார். தனி வட்டாட்சியர் செல்வம், வருவாய் ஆய்வாளர் தாமோதரன், கிராம நிர்வாக அலுவலர் சந்திரன் ஆகியோர் முன்னிலையில் முதியோர் உதவித் தொகை, சான்றிதழ் பெறுதல், ரேஷன் அட்டை திருத்தல், நீக்கம் போன்ற 96 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். தொடர்ந்து பொதுமக்கள் அளித்த மனுக்களில் 38 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உரிய சான்றிதழ்கள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டது. பிற மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.