ஸ்ரீபெரும்புதூர் உற்சவத்தில் வீரராகவபெருமாள் சுவாமி
திருவள்ளூர்: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் வேதாந்த தேசிகன் அவதார மகாஉற்சவம் சாத்துமறையுடன் இன்று நடைபெறுகிறது. இந்த மகா உற்சவத்தை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தங்க நகைகள் அணிந்து நேற்றிரவு 10.30 மணிக்கு திருவள்ளூரில் இருந்து புறப்பட்டார். இன்று அதிகாலை ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றார். அங்கு வீரராகவ பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம், வீதி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். நாளை அதிகாலை ஸ்ரீபெரும்புதூரில் இருந்து புறப்பட்டு, 11 மணிக்கு திருவள்ளூர் வந்தடைகிறார். வீரராகவ பெருமாள் தங்க நகைகள் அணிந்து சென்றுள்ளதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.