காரைக்கால் கடலில் அதிகளவு சிக்கிய தக்காளி மீன்கள்
காரைக்கால்: காரைக்கால் கடலில் அதிகளவு தக்காளி மீன்கள் சிக்கின.புதுவை மாநிலம், காரைக்கால் கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த மீனவர்கள் கடந்த 4 நாள் முன்பு கடலுக்கு சென்றனர். நேற்று கரை திரும்பினர். அவர்கள் விரித்த வலையில் வழக்கமாக கிடைக்கும் ஏற்றுமதி தரம்வாய்ந்த வவ்வால், காலா, வஞ்சிரம், பாறை மீன்களோடு செம்பரா மீன்களும் அதிகளவில் சிக்கின.அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை எடை உள்ள செம்பரா மீன் தக்காளி வண்ணத்தில் இருப்பதால் தக்காளி மீன் என அழைக்கின்றனர். மிகவும் ருசிவாய்ந்த மற்றும் மென்மையான இந்த மீன்கள் நேற்று சுமார் 300 கிலோ வரை கிடைத்தன. காரைக்கால் மீன் மார்க்கெட்டில் கிலோ ரூ.200க்கு ஏலம் போனது. ஏலம் எடுத்த வியாபாரிகள் மீன்களை கேரளாவுக்கு ஐஸ் வைத்து அனுப்பி வைத்தனர்.