Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
10
Oct
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை கண்காணிப்பு; தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கு 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்


விருதுநகர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கையை கண்காணிக்க தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கு 10 ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த பட்டியல் அக். 15ல் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து 1-1-2025 அன்று 18 வயது பூர்த்தியாகும் வாக்காளர்களின் சேர்க்கை அக். 15 முதல் நவ. 10 வரை நடைபெற உள்ளது. அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் 18 வயது நிறைவடைந்த வாக்காளர்கள், சேர்க்கை விண்ணப்பங்களை அளிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 2015 ஜன. 5ல் வெளியிடப்படும்.வாக்காளர்கள் சேர்க்கைக்காக தேர்தல் அலுவலர்கள் மூலம் வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணிகள், பேச்சு போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட உள்ளன. வாக்காளர் சேர்க்கையை கண்காணிக்க மாநில அளவில் 32 மாவட்டங்களுக்கும் சேர்த்து 10 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் விபரம்:
பூஜா குல்கர்னி - சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம்
சுகந்தி - விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர்
சுதீப் ஜெயின் - தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம்
முகம்மது அஸ்லம் - அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர்
அண்ணாமலை - நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்
சித்திக் - நாமக்கல், கரூர், திண்டுக்கல்
பாலசந்திரன் - கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
வெங்கடேஷ் - மதுரை, தேனி, விருதுநகர்
மணிவாசன் - ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை
சமயமூர்த்தி - தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி வாக்காளர் பட்டியல் பார்வையாளர்கள் அக். 15 முதல் நவ. 10 வரை முதல் ஆய்வையும், நவ. 11 முதல் டிச. 9 வரை 2வது ஆய்வையும், டிச. 11 முதல் ஜன. 5 வரை 3ம் ஆய்வினையும் நடத்த உள்ளனர். வாக்காளர் சேர்க்கைக்கு பெறப்பட்ட படிவங்கள் மற்றும் தள விசாரணை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்வார்கள். இறுதி வாக்காளர் பட்டியல் 2015 ஜன. 5ல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement