Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
04
Oct
உத்தரகண்டில் பனிக்காலத்தை முன்னிட்டு பத்ரிநாத் உள்பட 4 கோயில்கள் அடைப்பு



டேராடூன்: பனிக்காலம் தொடங்குவதை முன்னிட்டு பத்ரிநாத் உள்ளிட்ட 4 கோயில்கள் நவம்பர் 27 முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரகண்டில் இமயமலையில் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களுக்கும் ‘சார் தம் யாத்ரா’ என்ற பெயரில் இந்துக்கள் புனித பயணம் செல்வது வழக்கம். இந்த நான்கு கோயில்களும் ஒவ்வொரு ஆண்டும் பனிக்காலமான அக்டோபர்-நவம்பரில் அடைக்கப்பட்டு விடும். பின்னர் அவை பனிக்காலம் முடிந்து ஏப்ரல் மேயில் திறக்கப்படும். பனிக்காலமான அக்டோபர்-நவம்பரில் இப்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் என்பதால் பக்தர்கள் அங்கு செல்ல அனுமதி கிடையாது.

இதனையடுத்து நேற்று தசரா பண்டிகையின் இறுதி நாளான விஜயதசமி முடிந்து பத்ரிநாத், கேதார்நாத் கோயிலின் நிர்வாக கமிட்டி தலைவர் கணேஷ் கோயல் கூறுகையில், இந்த ஆண்டு பனிக்காலத்தை முன்னிட்டு நவம்பர் 27ம் தேதி பத்ரிநாத் கோயில் நடை சாத்தப்படுகிறது என்று தெரிவித்தார். அதேபோல் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் கோயில்களும் இந்த மாதத்தில் மூடப்படும். இதில் கங்கோத்ரி தீபாவளிக்கு மறுநாள் அடைக் கப்பட உள்ளது. யமுனோத்ரியும், கேதார்நாத் தும் தீபாவளியை யொட்டி வரும் பையா துஜ் வைபவத்திற்கு பிறகு அடைக்கப்படும். பின்னர் இந்த 4 கோயில்களும் பனிக்காலம் முடிந்து ஏப்ரல் - மேயில் மறுஅறிவிப்பு வெளியானபின் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்கப்படும்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement