திருப்பூர்: சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவை விடுவிக்க கோரி, திருப்பூரில் இன்று சாயப்பட்டறைகள் மற்றும் செகன்ட்ஸ் பனியன் நிறுவனங்களை மூட சங்கத்தினர் முடிவு செய்தனர். திருப்பூர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் இன்று மூடப்பட்டன. திருப்பூர் காதர்பேட்டையில் உள்ள செகண்ட்ஸ் பனியன் நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இதேபோல் உடுமலை நகரில் கடை அடைப்பு செய்ய வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு 14 சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. அதன்படி இன்று உடுமலை நகர் முழுவதும் ஓட்டல், இரும்பு கடை, மளிகை, ஜவுளி கடைகளும் அடைக்கப்பட்டன.