சென்னை எழும்பூர் வழியாக திருச்சி - புனே சிறப்பு ரயில் இன்று முன்பதிவு துவக்கம்
திருச்சி: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, திருச்சியில் இருந்து புனேவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்(எண்: 06801) செப்டம்பர் 21, 28, அக்டோபர் 5, 26 ஆகிய 4 ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 5.30 மணிக்கு திருச்சி ரயில்வே ஜங்ஷனிலிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு சென்னை எழும்பூரையும், மறுநாள் காலை 11.50 மணிக்கு புனேவையும் சென்றடையும்.சிறப்பு ரயில் (எண்: 06802) செப்டம்பர் 22, 29, அக்டோபர் 6, 27 ஆகிய 4 திங்கள் கிழமைகளில் புனேவிலிருந்து மாலை 3.40க்கு புறப்பட்டு, மறுநாள் செவ்வாய்க்கிழமை மதியம் 12.50க்குசென்னை எழும்பூருக்கும், இரவு 7.15 மணிக்கு திருச்சியையும் வந்தடையும்.இதற்கான முன்பதிவு, இன்று முதல் துவங்குகிறது. முதல் வகுப்பு ஏசி ஒன்று, 2ம் வகுப்பு ஏசி இரண்டு, படுக்கை வசதி 13, பொது 2, சரக்கு 2 என 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.இந்த ரயில், ஸ்ரீரங்கம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், அரக்கோணம், திருத்தணி, புத்தூர், ரேணிகுண்டா, கூடூர், ராசாம்பேட், கடப்பா, எரகுண்டலா, தடிபத்ரி, கோட்டி, குண்டக்கல், அதோணி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், யாத்கிர், வாடி, குல்பர்க், சோலாப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.