விளம்பரம் படத்தால் அப்செட் ஆன ஐஸ்
சென்னை: பண்ணையாரும் பத்மினியும் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா. இவர், பிட் ரோலில் நடித்த பட புரமோஷனில் பெரிதாக விளம்பரப்படுத்துகிறார்கள் என்று அங்கலாய்க்கிறார்.இது குறித்து அவர் கூறியதாவது:விளம்பரம் என்ற படத்தில் கிளாஸிகல் டான்ஸராக ஒரு பிட் ரோலில் இரண்டு வருடங்களுக்கு முன் நடித்தேன். அந்தப் படத்தின் ஹீரோயின் நான் இல்லை. தற்போது நான் பிரபலமானவுடன் அந்தப் படத்தின் விளம்பரங்களில் என் படத்தை பெரிதாக போடுகிறார்கள். இதனால் நான்தான் அந்தப் படத்தின் ஹீரோயின் என்று பலரும் தவறாக புரிந்து கொள்கிறார்கள். இது என்னை மிகவும் அப்செட் ஆக்கி விட்டது. தற்போது நான் ஹீரோயினாக நடிக்கும் திருடன் போலீஸ் பட ரிலீசுக்காக காத்திருக்கிறேன். இதில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். என்னுடைய அடுத்த படம் இடம் பொருள் ஏவல். இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.
இவ்வாறு ஐஸ்வர்யா கூறினார்.