ஹாலிவுட்டில் மகாபாரதம்: நான் ஈ ராஜமவுலி பிளான்
சென்னை: ராஜமவுலி ஹாலிவுட் படம் இயக்க முடிவு செய்துள்ளார்.‘நான் ஈ பட இயக்குனர் ராஜமவுலி தற்போது தமிழ், தெலுங்கில் ‘மகாபலி (பாஹுபாலி) படத்தை இயக்கி வருகிறார். அனுஷ்கா, தமன்னா, பிரபாஸ், ராணா, சத்யராஜ் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. இவரது கனவு படமாக மகாபாரதத்தை இயக்க எண்ணி உள்ளாராம். இதற்கான பணிகளையும் அவர் தொடங்கிவிட்டார். தற்போது இயக்கி வரும் ‘மஹாபலி படமே ரூ.175 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. அதைவிட பிரமாண்டமாக ‘மகாபாரதம் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ராஜமவுலி. இந்த படத்தை இயக்குவதற்கு மாநில அளவிலான படங்களை இயக்கினால் அதற்கான செலவு செய்வது கடினம் என்பதால் ஹாலிவுட்டில் இப்படத்தை இயக்க அவர் எண்ணி இருக்கிறாராம். இப்படத்தை இயக்கத் தொடங்கினால் அடுத்த 3 வருடத்துக்கு தமிழ், தெலுங்கில் பட இயக்கத்துக்கு டாட்டா காட்ட வேண்டி இருக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது.