11வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அடுத்தாண்டு ஆஸ்திரே லியா-நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. 2015ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடை பெற உள்ள உலக கோப்பை போட்டியின்போது, ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகளில் 14 நகரங்களில் 49 போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டி ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி மார்ச் 29ம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெற உள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளைக் காண லட்சக்கணக்கில் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இரு நாடுகளும் சுற்றுலாத்துறையை ஊக்கப்படுத்த முடிவு செய்துள்ளன.
சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள், ஒரு முறை விசா கேட்டு விண்ணப்பித்தால் இரு நாடுகளுக்கும் சென்று வர அனுமதிக்கலாம் என ஆஸ்திரேலியா, நியூசி லாந்து அரசுகள் முடிவு செய்துள்ளன. இதையொட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து சுற்றுலாத்துறை அமைச்சர்களின் கூட்டம் மெல் போர்ன் நகரில் நடந்தது. இதில், உலக கோப்பையை ஒட்டி சுற்றுலாத் துறைக் கான வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்து ஆலோ சனை நடத்தப்பட்டது. ஆஸ்திரேலிய சுற்றுலாத் துறை அமைச்சர் ஆண்ட்ரூ ராப் கூறுகையில், உலக கோப்பையின்போது சுற்றுலாப் பயணிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு எளிதாகச் செல்லும் வகையில் விசா தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச் சி யான உலக கோப்பை கிரிக் கெட் போட்டிகள், எங் களது சுற்றுலாத்துறைக்கு பெரி தும் பலன் அளிப்பதாக அமையும், என்றார்.