போலி ஆவணம் மூலம் அமெரிக்கா செல்ல முயற்சி 2 பேர் அதிரடி கைது
சென்னை: போலி ஆவணங்களை சமர்பித்து அமெரிக்கா செல்ல முயன்ற 2 பேரை தூதரக அதிகாரிகள் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த போலீசார் ஏஜன்டுகள் 2 பேரை தேடி வருகின்றனர்.ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த கிரண்குமார் கீர்த்தி (31), சுதீஷ் ரானா (35) இருவரும் அமெரிக்கா செல்ல விண்ணப்பித்திருந்தனர். விசாவுக்காக சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அவர்களது ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. அப்போது இருவரும் சமர்பித்தது போலி ஆவணம் என தெரிய வந்தது இதையடுத்து, தூதரக அதிகாரிகள் ராயபேட்டை போலீசாரிடம் இருவரையும் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் இருவரையும் கைது செய்தனர். அவர்களுக்கு போலி ஆவணம் தயாரிக்க உதவியாக இருந்த ஏஜன்டுகள் சந்திரசேகர், ராமாசுரேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.