20 நடிகர்களுடன் மாளவிகா மேனன்
சென்னை: 20 கதாபாத்திரங்கள் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் மாளவிகா மேனன்.ஒருவர் மட்டுமே நடிக்கும் படம், இருவர் மட்டுமே நடிக்கும் படம் என எண்ணிக்கை குறைந்த நடிகர்களுடன் கதைகள் அமைக்கப்படுகின்றன. அதேபோல் 20 பேர் முக்கிய வேடங்களில் நடிக்கும் நட்சத்திர கூட்டம் மிகுந்த படமாக உருவாகிறது ‘வெத்து வேட்டு. இதுபற்றி இயக்குனர் மணிபாரதி கூறும்போது,‘காதல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதல்ல எப்படி இருந்தாலும் காதல் காதல்தான் என்ற கருவை மையமாக வைத்து கமர்ஷியலாக உருவாகும் படம். ‘விழா என்ற படத்தில் நடித்த மாளவிகா மேனன் ஹீரோயின். ஹீரோவாக ஹரீஷ், முக்கிய வேடங்களில் இளவரசு, கஞ்சா கருப்பு, ‘ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன், சுஜாதா, தென்னவன், ஸ்ரீரஞ்சனி, பிளாக் பாண்டி, கோபால், மணி, கிரேன் மனோகர், மாக்கான், போண்டா மணி, வெங்கல்ராவ், சின்ன சில்க், உமா, நந்தகுமார், கம்பம் மீனா, நாஞ்சில் சரண் என 20 கதாபாத்திரங்கள் நடிக்கின்றன. தாஜ்நூர் இசை. காசி ஒளிப்பதிவு. குமார், ராமசாமி, சரவண மாணிக்கம், மூர்த்தி, லட்சுமணன் தயாரிக்கின்றனர். திருச்சி, பொள்ளாச்சி மற்றும் கேரளாவில் ஷூட்டிங் நடந்துள்ளது என்றார்.