அசல் பத்திரம் கேட்டு கொலை மிரட்டல்: புரோக்கர்கள் கைது
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (67). மனைவி மீனாட்சி (60). இவர்கள் தாங்கள் வசிக்கும் வீட்டுடன் கூடிய இடத்தை விற்று தரும்படி சென்னை அயனாவரத்தை சேர்ந்த மகேந்திரன் (51), சைதாப்பேட்டை வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (30) ஆகியோரிடம் கூறியிருந்தனர். அதற்காக வீட்டின் பத்திர நகலையும் அவர்களிடம் கொடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வந்த இருவரும், அசல் பத்திரத்தை கேட்டுள்ளனர். தர மறுத்ததால் ராமகிருஷ்ணனுக்கும் மீனாட்சிக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்து போன அவர்கள், கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்கு பதிந்து மகேந்திரன், தமிழரசன் ஆகியோரை நேற்று கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.