முதுகு வலி காரணமாக பட்ஜெட் உரையை பாதியில் நிறுத்திய ஜெட்லி
நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசத் தொடங்கினார். 46 நிமிடங்கள் தொடர்ந்து நின்று கொண்டே பேசிய போது அவருக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டது. வலி பொறுக்க முடியாததால், 5 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் கேட்டுக் கொண்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். இதையடுத்து 5 நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு பின்னர் தனது பேச்சை தொடங்கினார். இருப்பினும் தொடர்ந்து அவரால் நின்றபடி பேச முடியவில்லை. இருக்கையில் அமர்ந்து பேச சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, இருக்கையில் அமர்ந்து கொண்டு பட்ஜெட்டை படித்தார். இருப்பினும் அடிக்கடி இருக்கையில் சாய்ந்து ரிலாக்ஸ் செய்தபடியே இருந்தார். நாடாளுமன்ற வரலாற்றிலேயே பட்ஜெட் படிக்கும் போது எந்த நிதியமைச்சரும் ஓய்வு எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.