எஸ்கேஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் தொழில் வளர்ச்சி ஊக்குவிப்பு மையம் 9ம் தேதி துவக்கம்
திருவள்ளூர்: பூந்தமல்லி எஸ்.கே.ஆர் பொறியியல் கல்லூரியில் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு, வரும் 9ம் தேதி தொழில் வளர்ச்சி ஊக்குவிப்பு மையம் துவங்கப்பட உள்ளது. இம்மையத்தின் மூலம், குறைந்தது 10 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கண்டறிந்து, சிறந்த மற்றும் புதுமையான பொருட்களை உற்பத்தி செய்ய உதவி புரிய உள்ளது. இதற்காக கல்லூரியில் ஆய்வக வசதிகள், தொழிற்பயிற்சி கூடங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை வசதிகள் மற்றும் பேராசிரியர்களின் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.இவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்த தேவையான நிதி மற்றும் அறிவுசார் உதவிகளை கல்லூரியின் வாயிலாக வழங்கப்பட உள்ளது. இதனால் இக்கல்லூரியின் முன்னாள் மற்றும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தாங்கள் சுயதொழில் முயற்சிகளை நடைமுறைப்படுத்த வாய்ப்பாக அமையும்.வருகின்ற 9ம் தேதி துவங்கப்பட உள்ள இம்மையத்தை தொழில்துறை இயக்குனர் எஸ்.எம்.ஜம்காண்டி, வீல்ஸ் இந்தியா சென்னை, பொது மேலாளர் டி.சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். ஏற்பாடுகளை கல்லூரி தலைவர் ராமதாஸ், முதல்வர் செந்தில்குமார் செய்து வருகின்றனர். இதில், வேலைவாய்ப்புக்கான இளம் தொழில் முனைவோர் பங்கேற்கலாம்.