Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
05
Jul
பாக்தாத் அருகே போர் பதற்றம் ராணுவ ரோந்து வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

பாக்தாத்:ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே ராணுவத்தினர் மீது தற்கொலைபடை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியாயினர்.ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ள சலாஹிதீன் பிராந்தியத்தில் உள்ளது சமாரா நகரம். இது ஈராக்கியர்களின் புனித நகராகும். எனவே எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். இப்பிராந்தியத்திலும் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகளவில் உள்ளனர். இப்பிராந்தியத்தில் கடந்த 2006&ம் ஆண்டு முதல் இரு பிரிவினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலால் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போது ஈராக்கை ஆளும் ஷியா பிரிவு அரசை கவிழ்க்க சன்னி பிரிவு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தினந்தோறும் ஷியா பிரிவினர் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஈராக்கில் திக்ரித், சமாரா, மொசூல் உட்பட பல்வேறு நகரங்களையும் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக, சமாரா நகரில் நேற்று மதியம் தொழுகையின்போது ஈராக் ராணுவத்தினர் வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் ஏராளமான வெடிபொருட்கள் நிரம்பிய வாகனத்தில் வந்து ஈராக் ராணுவத்தினர் மீது வேகமாக மோதி வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில் ஈராக் ராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.இதேபோல், கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் சவுதி மற்றும் ஏமன் நாட்டு எல்லையில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலை படை தாக்குதலில்6 சவுதி வீரர்கள் பலியானார்கள். இதையொட்டி, சவுதி மற்றும் ஏமன் நாட்டு எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement