வரதட்சணை சித்ரவதை கர்ப்பிணி தற்கொலை: கணவர், மாமியார் கைது
திருவொற்றியூர்: மணலி அருகே எம்எம்டிஏ குடியிருப்பை சேர்ந்தவர் சம்சுதீன் (28). கால் டாக்சி அலுவலகத்தில் ஊழியர். மனைவி ரிஸ்வானா நஜிம் (21). கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் ரிஸ்வானா நஜிம் கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணியான அவரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ரிஸ்வானா நஜிமை அவரது கணவர், மாமியார் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த ரிஸ்வானா நஜிம், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து, மாதவரம் பால்பண்ணை போலீசில் ரிஸ்வானா நஜிமின் தந்தை முகமது அபிபுல்லா புகார் செய்தார். அதில், கணவர், மாமியார் நூர்ஜகான், நாத்தனார் ஷாகின் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால்தான் எனது மகள் தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என கூறியிருந்தார். போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.