தம்பி குத்திக் கொலை அண்ணனுக்கு ஆயுள்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த படாளம் கிராமத்தை சேர்ந்தவர் கவியரசன் (23). இவரது தம்பி ஏழுமலை (21). இருவரும் லாரியில் மணல் ஏற்றும் கூலி தொழிலாளிகள். இவர்களுக்குள் அடிக்கடி வாய் தகராறு ஏற்படும். கடந்த 2011, மே 8ம் தேதி ஏழுமலையில் செல்போன் காணாமல் போனது. கவியரசன் எடுத்ததாக கருதிய அவரிடம் ஏழுமலை கேட்டுள்ளார். வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கவியரசன், கத்தியை எடுத்து ஏழுமலையை குத்தினார். சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இது குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி ஹேமலதா, வழக்கை விசாரித்து, தம்பியை கொலை செய்த குற்றத்துக்காக கவியரசனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.