தென் அமெரிக்காவில் குழந்தை தொழிலாளர் வயது வரம்பு 10 ஆக குறைப்பு
லா பாஸ்:தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின்நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி குழந்தை தொழிலாளர்களின் வயது வரம்பை 10 ஆக குறைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்தின்படி பணிபுரியும் குழந்தை தொழிலாளர்களின் மனநலம் மற்றும் உடல்நலம் ஆகியவை முழுமையான ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட வேணடும். எக்காரணத்தைக் கொண்டும் குழந்தை தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து எம்பி அடால்போ மென்டோசா கூறுகையில், இங்கு வறுமை அதிகமாக உள்ளது. இதனால் பல்வேறு குடும்பங்களில் குழந்தைகளை வேலைக்கு அனுப்பித்தான் தங்களது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே குழந்தை தொழிலாளர்களின் வயது வரம்பை தளர்த்தும்படி கோரிக்கை வந்தன. சர்வதேச விதிகள் அனுமதித்துள்ள வரையறைப்படி தற்போது புதிதாக இயற்றப்பட்டுள்ள சட்டத்தில் 12 வயதில் இருந்து குழந்தைகள் பிறருக்காக வேலை செய்யலாம் என்றும், 10க்கு பிறகு சுய தொழில் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.