60 வயது பாட்டி வேடமா நடிகை வேகா ரெடி
சென்னை: தமிழ் படங்களில் நடிக்காமல் திடீரென்று காணாமல்போனது ஏன் என்பதற்கு பதில் அளித்தார் வேகா.‘சரோஜா, ‘வானம், ‘பசங்க போன்ற படங்களில் நடித்திருப்பவர் வேகா. இவர் கூறியது:ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு தமிழில் காணாமல்போனது ஏன் என்கிறார்கள். சில படங்களில் நடித்தபிறகு நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். அங்கு பல்வேறு பட சம்பந்தமான பணிகளில் பணியாற்றினேன். தயாரிப்பு சம்பந்தப்பட்ட பணிகளை முக்கியமாக கற்றேன். அவைகளை முடித்துக்கொண்டு மீண்டும் நடிக்க வந்துவிட்டேன். தற்போது இந்தியில் ‘சிட்டகாங் என்ற வரலாற்று படமொன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். தமிழ் படங்களில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். சரோஜா படம் மூலம் என்னை இயக்குனர் வெங்கட் பிரபு அறிமுகப்படுத்தினார். அதுதான் எனது சினிமா வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது. தமிழில் பல்வேறு இயக்குனர்களுடன் பேசி வருகிறேன். நல்ல ஸ்கிரிப்ட் அமைந்தால் ஒப்புக்கொள்வேன். நான் சின்ன பெண்தான். ஆனால் 60 வயது குடுகுடு பாட்டியாக நடிக்க வாய்ப்பு வந்தாலும் அது வலுவான கதாபாத்திரமாக இருந்தால் நடிக்க தயார். இவ்வாறு வேகா கூறினார்.